ஒமிக்ரான் வைரஸ் வீரியம் அதிகமாக உள்ளது ; திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

ஒமிக்ரான் வைரஸ் வீரியம் அதிகமாக உள்ளது ; திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில், பன்னாட்டு விமானங்களில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான ஒமிக்ரான் பரிசோதனை நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில்..,

ஓமிக்கரான் வைரஸ் உலகம் முழுவதும், வேகமாக பரவி வருகிறது அதன் வீரியம் அதிகம் உள்ளது.

திருச்சியில் வெளிநாடுகளில் இருந்து இன்று வந்த பயணிகள் 663 பேருக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது, அவர்களுடைய முகவரிகள் சேகரிக்க பட்டுள்ளது. 1 வாரம் வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பல்வேறு நாடுகளில் வேலை செய்து வருவபர்கள் சுழற்சி முறை பரிசோதனை செய்யாடுகிறது. பரிசோதனை செய்ய வசதி இல்லதோருக்கு தமிழகத்தில் மட்டும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

திருச்சியில் பரிசோதனை செய்து பாசிட்டிவ் என வந்தால் சாதாரண கொரோனா வர்டுகளில் தங்க வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் தங்கவைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்யும்பொழுது
பயணிகளிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவர் மூலம் 8 பேருக்கும் பரவும் என கூரப்பட்டது. இது அதைவிட கூடுதலாக பரவுகிறது.

சென்னை, கோவையை விட திருச்சியில் மிக குறுகிய நேரத்தில் பரிசோதனை நடத்தபடுகிறது.

தாமதம் இல்லாமல் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆறு முதல் ஏழு மாவட்டங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளது.

இன்று மதுரையில் 477பேர், நேற்று சென்னை 500 க்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *