காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு DGP நேரில் சென்று ஆறுதல்

 

பூமிநாதன் வீரத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றியுள்ளார் – ஒரு சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.

குறிப்பாக சாதாரண ஆடு திருட்டு என்று அவர் விட்டுவைக்காமல் முறைப்படி விசாரணை மேற்கொண்டுள்ளார் – 3 பேரை 15 கிலோமீட்டர் துரத்தி சென்று பிடித்து உள்ளார்,ஆயுதத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளார்,பின்னர் அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுடைய பெற்றோருக்கு செல்போனில் அழைத்து இருபத்தி மூன்று நிமிடங்கள் அறிவுரை கூறியுள்ளார், சட்டத்துறை அறிவுரைப்படி,சட்ட விதிகள்படி செய்ய வேண்டியதை முறையாக செய்துள்ளார்.

தீடிரென இந்த சிறுவர்கள் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை – அவருடைய வீரமரணம் தமிழக காவல்துறை வீரமிக்க விவேகம் மிக்க காவல்துறை என்பதனை எடுத்துக் காட்டுகிறது.

சிறுவர்களைப் பொறுத்தவரை மிகவும் அன்போடு கவனத்தோடு நடந்துகொள்ளும் காவல்துறை என்பதையும் இதன் வாயிலாக நமக்கு தெரிகிறது – அவர் அதை நிரூபித்துக் காட்டி உள்ளார்.

தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் அவருடைய மகனுக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறி உள்ளார்.

தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

1856 ஆவது ஆண்டில் இருந்தே காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்றுள்ளது – இது ஒரு சவால் மிக்க துறை தான்,பூமிநாதன் அதை எதிர்கொண்டு தன்னுடைய உயிர் தியாகத்தை செய்துள்ளார்.

காவல்துறையினர் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது அவளுடைய கைத் துப்பாக்கி போன்ற பாதுகாப்பு காரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

காவல்துறையினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது.

சிறுவர்கள் என்பதால் இவர் பனிவோடு பேசி உள்ளார் – இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி.

பாய்ஸ் கிளப் எல்லா மாவட்டத்திலும் உள்ளது – சிறுவர்கள் தவறு செய்யும் போது அவர்களை அங்கு சேர்த்து முறை படுத்துகிறோம்,மேலும் சிறார் கிளப்களை
ஆரமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மணிகண்டன் மது அருந்தி உள்ளார் என்பது தெரிய வருகிறது – இந்த புலன் விசாரணையில் 100% இவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

எல்லாமே ஆதாரத்தின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது – புலன் விசாரணையை நான் முழுமையாக விசாரித்தேன்

காவல்துறை மீது எந்தவித சந்தேகமும் பட வேண்டிய அவசியமே இல்லை.

ஆடு திருடும் சம்பவங்கள் அதிகம் நடக்க கூடிய இடம் தான் அந்த இடம் – ஏதோ அடு திருட்டு தானே என அலட்சியம் இல்லாமல் முறைப்படி விசாரணை மேற்கொண்டுள்ளார் பூமிநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *