திருச்சியில் பேராயரை கண்டித்து கிறிஸ்தவ அமைப்பினர்  போராட்டம்

 

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை 300 ஆண்டுகள் பழமையானது. இதில் சுமார் 2.50லட்சம் பேர் உள்ளனர். இதில்
13 வது ஆயரான டேனியல் ஜெபராஜ் ஓய்வு பெற்றும் தனக்குத்தானே பதவி நீட்டிப்பு செய்து கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியால் தேர்தல் நடத்தி தேர்தெடுக்கபட்ட நிர்வாக குழுவை கலைத்துவிட்டு திருச்சபையின் விதிகளுக்கு எதிராக நீதிமன்ற ஆணைக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை கண்டித்து இன்று காலை திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு டி.இ.எல்.சி பொதுச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் பணியில் மத மாற்றம் செய்தும் முறைகேடு செய்து சுமார் 30நபர்களிடம் இருந்து 20 முதல் 30 லட்சம் வரை மோசடியாக பெற்றுக் கொண்டு பணி வழங்கியுள்ளார், நீதிமன்றங்கள் ஆனைகெதிராக எதிராக திருச்சபையின் இடங்களை குத்தகைக்கு விட்டு சுமார் 100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளார், பொய்யான கணக்குகளை தயார் செய்து விடுதி செலவினங்களை வெளியிட்டுள்ளார், மேலும் பேராயத்தில் தேர்தல் நடத்தி நடத்தி 14வது புதிய பேராயரை தேர்ந்தெடுப்பதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல் தடையாக உள்ளார். எனவே தமிழக முதல்வர் சிறுபான்மை ஆணைய தலைவரின் கீழ் குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, நாகை, பொறையார், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பங்குமக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *