விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

திருச்சி அக் 14

டெல்லியில் போராடும் விவசாயிகள் ஆதரவாக திருச்சி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு
தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 45 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர் ன. மூன்றாம் நாளான இன்று விவசாயிகள் பிச்சை எடுத்து உண்ணாவிரதம் ஈடுபட்டு வருகின்றனர். 46 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே திருச்சியில் வெளியிடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுக்கவே இன்று தலைமை அலுவலகத்தில் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *