திருச்சியில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாமம் இவரது மகள் காயத்ரி (32).

இவர் கடந்த 2014 வருடம் உறையூர் நாச்சியார் பாளையம் காமராஜர் கல்விக்கூடம் அருகே சென்று கொண்டிருந்தபோது திருச்சி கே கே நகர்,சிம்கோ மீட்டர் பகுதியை சேர்ந்த ரெனால்டு ரோஸ் லியோ என்பவர் கத்தியை காட்டி அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றார்.

உடனே காயத்ரி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கானது திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர் குற்றவாளி லியோவிற்கு 5 வருடம் சிறை தண்டனையும்,5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதன் பின்னர் லியோ கோவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *