வாக்களித்த வாக்காளர்களுக்கு SDPI கட்சி நன்றி

 

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் தனித்து நின்று 25 ஊராட்சி வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர். பல இடங்களில் ஒற்றை இலக்க வாக்கு எண்ணிக்கையில் வெற்றியை இழந்துள்ளனர். ஆளும் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பண விநியோகம், கூட்டணிகள் என அனைத்தையும் தாண்டி, எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வெற்றிபெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– நெல்லை முபாரக்-மாநில தலைவர்  SDPI கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *