UTJ பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

திருச்சி.

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்ட பொதுக்குழு மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கலந்து கொண்டு, எதிர்கால திட்டங்கள் பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டு புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. அதன்படி மாவட்ட தலைவராக சாதிக் பாஷா, மாவட்ட செயலாளராக சேக் மைதீன், மாவட்ட பொருளாளர் ஷாஹீன், மாவட்ட துணை தலைவராக
சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளராக
காஜா மொய்தீன்,
ரபீக் உசேன் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில், அனைவரும் நூலகம் சென்று புத்தகம் படிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, திருச்சி பகுதியில் மழைகாலத்தில் கழிவு நீர் தேங்கும் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்திரபிரதேச விவகாரத்தில் ஒன்றிய இணைஅமைச்சர் பதவி விலகி நீதமான விசாரணை நடைபெறவேண்டும். பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 6 மாத வகுப்பு ஆரம்பித்து இஸ்லாமிய கல்வியின் விழிப்புணர்வை ஏற்படுத்த பிராச்சாரம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *