திருச்சியில் உயர்மட்ட சாலை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை

தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புதுடெல்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து தமிழகத்தில் செயல்ப்படுத்தபட வேண்டிய தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம் குறித்து விவாதித்தார்…இதில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மற்றும் துவாக்குடி வரை குறைவான நில எடுப்புடன்  15 கி.மீ நீளத்திற்கு ரூ.1500 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலம் சாலை அமைக்கலாம். உயர் மட்ட சாலை அமைப்பது விபத்துக்களை தடுப்பத்துடன் கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் உள்ளூர் வாகன போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வாக அமையும். மேலும் வணிக வளாகங்கள் கட்டுமானங்கள் நிறைந்த பகுதியில் நுழையாமல் உயர் மட்ட சாலையை பயன்படுத்தி விரைவாக செல்லலாம் என்று ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *