ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது – செந்தில் பாலாஜி

 

தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது – ஆனால் 60 ஆயிரம் டன் நிலக்கரி
ஒவ்வொரு நாளும் வரவழைக்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில் ஒரு நாளைக்கு 1200 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி இருந்தது – தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி நம்மிடம் இருப்பு உள்ளது – 6 நாளுக்கான இருப்பு நாம் வைக்க கட்டுபாடுகள் மத்திய அரசின் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.

6800 மெகாவாட் அளவிற்கு கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது, சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் அந்தத் திட்டங்களை மறுஆய்வு செய்து அதை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

தமிழக முதல்வரை பொருத்தவரை ஒரு நொடிப்பொழுது கூட தமிழகத்தில் மின்வெட்டு காரணம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதே,தமிழகத்தில் மின் தடை என்பதற்கு இருக்காது.

ஒரு ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது – அதற்கு தேவையான மின் உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும், சோலார் மூலமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்வதற்கான திட்டமும் உள்ளது.

நிலக்கரி பிரச்சினை என்பது கண்டிப்பாக நம் கையில் முழுமையாக உள்ளது – மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *