மயானங்களில் காலியிடங்கள்: ஆன்லைனில் அறிந்து கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

மின்மயானங்களில் சடலங்களை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ காலியிடம் இருக்கிறதா, இல்லையா போன்ற விவரங்களை ஆன்லைன் வழியாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி சென்னை நுங்கம்பாக்கத்தில் இதை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள இடுகாடுகளில் உடல்களை தகனம் செய்வதற்கு தேவையான வசதிகளை தடையில்லாமல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிக அளவிலான இறப்பு எண்ணிக்கை பதிவாகி வரும் சூழலில், மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த இடுகாடுகள், இனி 9 மணி வரை செயல்படும்.

மின் மயானங்கள் மற்றும் இடுகாடுகளில் உடலை தகனம் செய்ய காலியிடம் இருக்கிறதா, இல்லையா போன்ற விவரங்களை, ஆன்லைன் வாயிலாக தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *