மதிய நேரத்திலும் மக்கள் கூட்டத்தால் அலைமோதும் திருச்சி காந்தி மார்க்கெட்

மதிய நேரத்திலும் மக்கள் கூட்டத்தால் அலைமோதும் திருச்சி காந்தி மார்க்கெட்.

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், காலை 6 மணி முதல் 12 மணி வரை மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதி அளித்துள்ள நிலையில்,திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி, மளிகை, பூக்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டில் உட்புறமும், வெளிப்புறமும் அதிக அளவிலான மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்களில் பலரும் முகக்கவசம் அணிய வில்லை, தனி மனித இடைவெளியை பின்பற்றவில்லை, இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

‘டௌக்டே’ 2021ஆம் ஆண்டின் முதல் புயல்… 

காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *