ஓய்வுபெற்ற அதிகாரி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓய்வுபெற்ற அதிகாரி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகர் 4வது தெருவில் சேர்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார் (வயது 61) இவர் பெல் நிறுவனத்தில் டி. ஜி.எம் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பெல் நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதனால் படுகாயம் அடைந்த சுப்பிரமணிய பாரதியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அந்த லாரியை பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் மடக்கி பிடித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *