திருச்சி கோர்ட்டுக்கு வந்தவர் திடீரென மயங்கி விழுந்து சாவு.

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் அருவிசெல்வம் (52). இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அருவிசெல்வம் இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை திருச்சி கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்ட ஆலோசனை மையத்துக்கு வந்தபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்துவிட்டு, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *