பஸ்ஸில் தவறவிட்ட கோவில் காவலாளி பணத்தை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

நேபாள நாட்டைச் சேர்ந்த யுவராஜ் வயது 29 என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நேபாளம் செல்வதற்காக சமயபுரம் சுங்க சாவடியில் இருந்து சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறினார், சென்னை சென்றவுடன் நேபாளம் செல்வதற்கு உத்தரப்பிரதேசம் செல்லும் ரயிலில் ஏறிய போது தான் கொண்டுவந்த பணம் மற்றும் உடமைகளை பஸ்ஸில் தவறவிட்டது நினைவுக்கு வந்தது.

இதை தொடர்ந்து தந்தை மூலம் சமயபுர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் போலீசார் சமயபுரம் சுங்க சாவடியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் யுவராஜ் பயணம் செய்த பஸ் சென்னை அண்ணாநகரில் இருந்தது.

பின்னர் யுவராஜ் தவறவிட்ட உடைமைகளும் பஸ்ஸில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தொடர்பு கொண்டு பணம் மற்றும் உடமைகளை அடுத்த பஸ்ஸில் சமயபுரத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் போலீசார் உடைமைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *