திருச்சி தில்லைநகர் அருகே மாஜி ராணுவ வீரர் மர்ம சாவு ; போலீசார் விசாரணை

திருச்சி தில்லைநகர் அருகே மாஜி ராணுவ வீரர் மர்ம சாவு ; போலீசார் விசாரணை.

திருச்சி, தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன்(54). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மனைவிகள். இவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் நாகமங்கலம் குடிசை மாற்று வாரியத்தில் தனியாக வசித்து வந்தார்.

இவர் நேற்று மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மணிகண்டம் விஏஓ சண்முகவடிவு கொடுத்த புகாரின் பேரில், மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *