திருச்சி முகாம் சிறையில் மேலும் 9 கைதிகளுக்கு கொரோனா.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், சூடான், நைஜீரியா, ருவாண்டா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 109 பேர் அடைக் கப்பட்டுள்ளனர்.

போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த வர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் போன்ற வர்கள் இந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்க ளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் முகாமில் உள்ள மேலும் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் சிறப்பு முகாமில் 6 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த முகாமில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *