திருச்சி தேவதானம் அருகே நேற்று முழு ஊரடங்கில் சூதாட்டம்.

திருச்சி தேவதானம் அருகே நேற்று முழு ஊரடங்கில் சூதாட்டம்.

திருச்சியில் நேற்று ஞயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

திருச்சி தேவதானம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சிலர் சீட்டு விளையாடிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கோட்டை போலீசார் அங்கு நடத்திய அதிரடி சோதனையில், சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷன், நாகேந்திரன், எழிலரசன், மருதுபாண்டி, கௌதம், திருஞானம், ரவி, சதீஷ், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *