பணம் மோசடி செய்த பெண்ணை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.

பணம் மோசடி செய்த பெண்ணை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.

பொதுமக்கள் பெயரில் சுய உதவி குழுவில் 15 லட்சம் வரை பணத்தை ஏமாற்றிய பெண்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து உள்ள நாக நல்லூரில் வசிப்பவர் மஞ்சுளாதேவி அங்குள்ள பொது மக்களுக்கு சுய உதவிக்குழு மூலம் தனிநபர் கடன் வாங்கித் தருவது வழக்கம் அதுபோல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுமார் 15 லட்சம் பணம் வரை தனிநபர் கடனை பெற்றுக்கொண்டு இவர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் பணம் கொடுத்தவர்கள் நேரடியாக ஊர் மக்களிடம் வந்து கேட்ட பொழுது அவர்கள் நாங்கள் பணம் பெறவில்லை என்று கூறியதும் அவர்கள் பெயரில் மஞ்சுளாதேவியே பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது.

இன்று மஞ்சுளதேவி தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்ததை அறிந்த அந்த ஊர் மக்கள் இவரை நாகநல்லூருக்கு அழைத்து வந்து பணம் கேட்டு வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் பின் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *