ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு எல்ஐசி ஊழியர்கள் நன்கொடை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோவிந்தாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு எல்ஐசியில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பள்ளி மாணவர்கள் அமரக்கூடிய இருக்கைகள் மற்றும் விளையாட்டு பொருள்கள் வழங்கினார்கள் .

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸினி சுகுணா அவர்கள் இதைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ் துறையூர் எல்ஐசி கிளை மேலாளர் விஜயராகவன் , பன்னீர்செல்வம், செந்தில்குமார், ஜோன் சண்முகராஜா, பழனியாண்டி, மற்றும் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தளவாட பொருட்களை பெற்றுக்கொண்ட தலைமையாசிரியர்ரோஷினி சுகுணா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *