துறையூரில் பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த தம்பதியினர் கைது

துறையூரில் பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த தம்பதியினர் கைது

துறையூர் அருகே உள்ள வி.ஏ.சமுத்திரத்தை சேர்ந்தவர் பாத்திமா இவர் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் துறையூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூபாய் ஒரு லட்சத்தை வரவு வைப்பதற்காக எடுத்துக் வந்துள்ளார்.

அந்த பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்தும் போது திடீரென ஒருவர் வந்து உங்களை வங்கியில் அழைக்கின்றனர் என்று கூறியதும் பாத்திமா சற்றும் சிந்திக்காமல் வங்கியில் சென்று விசாரித்த போது யாரும் அழைக்கவில்லை என்று கூறியது தெரிய வந்தது உடனே தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை நினைவு வந்து பார்க்கும்போது அதில் வைத்திருந்த ரொக்கம் ரூபாய் ஒரு லட்சம் காணவில்லை அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் பாத்திமாவின் கவனத்தை திசை திருப்பியநபர் நம்பர் ஒன் டோல்கேட்டில் சேர்ந்த ராமர் என்பதும் அவருடன் அவர் மனைவியும் இருந்தது தெரியவந்தது போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *