திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ்கள் – கணக்கெடுப்பு தீவிரம்.

திருச்சியில் கொரோனா அதிகரிப்பு ; மாவட்டத்தில் எத்தனை ஆம்புலன்ஸ்கள் உள்ளது என்ற கணக்கெடுப்பு தீவிரம்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள மொத்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு? தனியாரிடம் எத்தனை உள்ளன அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் எத்தனை ஆம்புலன்ஸ்கள் உள்ளன? என்ற புள்ளிவிவர கணக்கையும் சேகரித்து வருகிறது.

இதில் அரசு தரப்பில் 10 ஆம்புலன்ஸ்களும் தனியார் மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகி நெருக்கடி ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கூடுதலாக 10 ஆம்புலன்ஸ்களை வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *