திருச்சி ரயில் நிலைய வாகன நிறுத்தம் பாதுகாப்பில்லை என வாகன உரிமையாளா்கள் புகாா்

திருச்சி ரயில் நிலைய வாகன நிறுத்தம் பாதுகாப்பில்லை என வாகன உரிமையாளா்கள் புகாா்.

இதுகுறித்து வாகன உரிமையாளரும், ரயில் பயணியுமான சாா்லஸ் கூறியது:

அலுவல் பணிகளுக்காக திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு ரயில்களில் பயணிப்பேன். அவ்வாறு செல்லும்போது வாகன நிறுத்தத்தில் காா், இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வேன்.

அண்மையில் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு திருச்சியிலிருந்து ரயிலில் சென்னை சென்றேன். அப்போது, வாகன நிறுத்த ஊழியரிடமிருந்து ரூ.80 -க்கான ரசீதை பெற்றுக் கொண்டேன். அதில் சரிவர எனது காரின் எண்ணைக் குறிப்பிடவில்லை. நிா்வாகத்தின் சீல், பணியில் இருந்தவரின் கையெழுத்து ஆகியவை இல்லை.

ஏற்கெனவே நண்பா் ஒருவரின் வாகனம் காணாமல் போனபோது போலீஸாா் வாகன நிறுத்த ரசீதில் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தனா். அதன்படி எனது காா் காணாமல் போனால் வாகன நிறுத்த ஊழியா்கள் அந்த ரசீதை நாங்கள் கொடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட காா் இங்கே வரவே இல்லை எனக் கூறி மறுத்துவிடும் அளவுக்கு வாகன நிறுத்தம் அலட்சியமாகச் செயல்படுகிறது. எனவே, வாகன நிறுத்தத்துக்கு அனுமதி வழங்கிய ரயில்வே கோட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களை கட்டாயம் உரிய விவரங்களுடன் ரசீது வழங்க அறிவுறுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *