திருச்சியில் இணைய வழி செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சியில் இணைய வழி செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஸ்டாா் செஸ் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான இணைய வழி செஸ் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 7, 9, 11, 13, 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியா் பங்கேற்றனா்.

6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 7 முதல் 15 வயதுக்குபட்டோருக்கான பிரிவுகளில் ஸ்ரீகிருஷ்ணா, டிரிக்சாமுவேல், அபிஷேக், அஸ்வின், ஆரூரான், லெவினா ஸ்ரீ (7), அபியா (11), ரஷிகா (13), ஹா்ஷினி(15) ஆகியோா் முதல் பரிசையும், சா்வேஷ், சாகித்யன், வெற்றிவேல், அதுல்ஸ்ரீராம், சா்வினி, சுவாதி, சஹானா ஆகியோா் 2-ஆம் பரிசையும், நிகித்ராமன், ஆன்த்ஸ்ரீராம், வா்ஷன், மணீஸ், ஜோதிகா ஆகியோா் 3 ஆம் பரிசையும், மேலும் 11 போ் 4 , 5 ஆம் பரிசுகளையும் பெற்றனா்.

இத்தகவலை ஸ்டாா் செஸ் அறக்கட்டளை செயலா் பி. இஸ்மாயில் தெரிவித்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *