வங்கிகள் செயல்படும் நேரத்தை குறைக்க மணிமாறன் கோரிக்கை

வங்கிகள் செயல்படும் நேரத்தை குறைக்க மணிமாறன் கோரிக்கை

சென்னை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வகையில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் வங்கிகளிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று வங்கி ஊழியர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்திந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நிர்வாகிகள் எஸ்.எல்.பி.சி அமைப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில், வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

பரிமாற்றங்களை குறைக்க வேண்டும். வங்கியியல் மற்றும் நிர்வாகப் பிரிவில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வங்கி அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுபோன்ற விதிமுறைகள் குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின்போது கூட்டமைப்பின் துணைத்தலைவர் பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *