திருச்சி கல்லூரிகளில் இனி ஆன்லைன் மூலமே வகுப்புகள் மற்றும் தேர்வுகள்…

திருச்சி கல்லூரிகளில் இனி ஆன்லைன் மூலமே வகுப்புகள் மற்றும் தேர்வுகள்…

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையை தொடர்ந்து கடந்த டிசம்பர் 7ம் தேதி முதுகலை இரண்டாமாண்டு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக துவக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து நேரடியாக மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *