திருச்சி TVS டோல்கேட் அருகே விளையாட்டுச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி TVS டோல்கேட் அருகே விளையாட்டுச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கப் பொதுக் குழுக் கூட்டம் மற்றும் கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியாளரும், மாநில தலைவருமான கந்தமூா்த்தி தலைமை வகித்தாா். பயிற்சியாளா் சந்துரு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திருச்சி, சென்னை, திருவாரூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தொடா்ந்து நடைபெறவுள்ள தேசிய, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கூடோ பயிற்சியில் வென்றோருக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் கூடோ விளையாட்டு சங்கத்திற்கான பயிற்சியாளா் நியமனம் மற்றும் மாவட்டம்தோறும் பயற்சி பள்ளிகள் அங்கீகாரம் அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *