திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்.14 முதல் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை 2,390 பேருக்கும், வியாழக்கிழமை 9,938 பேருக்கும், வெள்ளிக்கிழமை) 12,778 பேருக்கும் என மொத்தம் 25,106 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது கோவேக்சின் 600 உள்பட 10 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மொத்தம் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இத்தகவலை திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் ராம்கணேஷ் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *