திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் திருச்சிக்கு நேற்று மாலை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த மொய்தீன் குட்டி(வயது 49) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.11 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான 232 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *