JEE தேர்வு ஒத்திவைப்பு

நாட்டில் கொரோனா பரவல அதிகரித்து வருவதால் JEE தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இத் தேர்வு முதல் இரண்டு கட்டமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது.

வருகின்ற ஏப்ரல் 27, 28,30 தேதிகளில் அடுத்த கட்ட தேர்வு நடைபெற இருந்தது.

 

https://twitter.com/EduMinOfIndia/status/1383664389723619337?s=20

 

இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
மீண்டும் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், 15 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *