ஸ்மார்ட் சிட்டி முயற்சியில் திருச்சி, குவிந்து கிடக்கும் குப்பை….

ஸ்மார்ட் சிட்டி முயற்சியில் திருச்சி ; எடமலைப்பட்டி புத்தூர் அருகே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை.

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி அக்குவதற்கான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் எடமலைபட்டி புத்தூர் சர்வீஸ் சாலையோரங்களில் குப்பை கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கொரோனா காலத்தில் இப்படி அசுத்தமான இடங்களை விரைவாக நடவடிக்கை எடுத்து சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *