திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி

திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது .

நாடகக்கலையின் மூலமாக உலகத்திற்கு அறிமுகமான நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார் . அவரின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் நாடக கலைஞர்கள் நடிகர்கள் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் முகமது மஸ்தான், கணேசன், பாட்ஷா, கண்ணன் சுதர்சன், மணிவேல், பாமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *