திருச்சி காந்தி மார்க்கெட்டில் கொரோனா விதி மீறல்…

கொரோனா விதி மீறல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 10 கடைகளின் வியாபாரிகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.

காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் இடமாறி செல்லாததால், மொத்த வியாபாரிகளையும் அப்புறப்படுத்தி ஜி-கார்னர் திடலுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *