மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி

திருச்சியில் எடத்தெரு அண்ணாசிலை அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி ; பாலக்கரை போலீசார் விசாரணை.

திருச்சி திருப்பராய்த்துறை பெரியார்நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 20). இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி விடுமுறை நாளில் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் கார்த்திக் நேற்று காலை திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே ஒரு வீட்டில் சாரத்தில் நின்றபடி பெயிண்டிங் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே சென்ற மின்கம்பியில் அவரது தலை உரசியது.

 

இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சாரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *