கொரோன விழிப்புணர்வு செய்த திருச்சி உதவி ஆணையர்

திருச்சி விமான நிலையம் அருகே அதிக பயணிகளை ஏற்றிவந்த பேருந்துகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்த உதவி ஆணையர்.

தமிழகத்தில் கொரோன பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் பல்வேறு இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படி விமான நிலைய சோதனைச்சாவடியில் உதவி ஆணையர் அப்துல் காப்பார் தலைமையில் பேருந்துகள் சோதனையில் ஈடுபட்டபொழுது அவ்வழியே அதிக பயணிகளை ஏற்றி வந்த பேருந்தின் கண்டக்டரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதமும் வசூலிக்கப்பட்டது.

பேருந்தில் நின்று செல்லக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ள நிலையில் அதிக கூட்டம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *