இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் முன்னாள் அமைச்சர்

கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசியை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பால்பண்ணை அருகே உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று செலுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை துவங்கியுள்ளதால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி முதல் தடுப்பூசியை சில நாட்களுக்கு முன்பு செலுத்திக்கொண்டார். இன்று கொரோனா இரண்டாம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை பால்பண்ணை அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *