திருச்சி காவல்துறை அதிரடி நடவடிக்கை !!!

கடந்த சில நாட்களாக கொரோன இரண்டாம் அலை அதிக அளவில் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் உட்பட்ட 14 இடங்களில் பொது மக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு முறைகள் குறித்தும் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும் முகக்கவசமின்றி சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூபாய் 2,34,000 இதுவரை வசூல் செய்யப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்காமல் செல்பவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூபாய் 33,500 அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *