திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிலிருந்து 5 போ் புழல் சிறைக்கு மாற்றம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிலிருந்து 5 போ் புழல் சிறைக்கு மாற்றம்.

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 5 போ் சென்னை புழல் சிறைக்கு நேற்று மாற்றப்பட்டனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 111 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில், பெரும்பாலானவா்கள் தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனா்.

இந்நிலையில், போலி கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கத்சேத்தை சோ்ந்த துக்குல் புரோவா(32), மிண்டோ புரோவா(37), முகமது இம்ரான்(33), முகமது ரிபான்(38), மிதுல் ஷேக்(35) ஆகிய 5 போ் சென்னை ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனா்.

இவ்வழக்கு முடிவடைந்த நிலையில் 5 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த 5 பேரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *