பீடி வாங்கி வர மறுத்தவருக்கு கத்திகுத்து

திருச்சி கோட்டை ரயில்வே காலனி அருகே பீடி வாங்கி வர மறுத்தவருக்கு கத்திகுத்து ; கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர்(19). இவர் கோட்டை ரயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்த துரை(22), சூர்யா ஆகியோர் பீடி வாங்கி வரச் சொல்லி இருக்கின்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அபுதாதீர் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டார். இதுகுறித்து அபுதாகிர் கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *