திருச்சியில் கொரோனா தொற்று 90 சதவீதம் !!!

திருச்சியில் கொரோனா தொற்று 90 சதவீதம் மாநகராட்சி பகுதியில் பதிவாகிறது – சுகாதாரத்துறை அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலை வேமாக பரவி வருகிறது. தினமும் 150 முதல் 200 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவில் 199 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது.

இதில் 90 சதவீதம் பேர் திருச்சி மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள். முன்பு இல்லாத அளவுக்கு கொரோனா மாநகர பகுதியில் வேகமாக பரவி வருகிறது. கடந்த காலங்களில் தொற்றாளர்களில் பாதி அல்லது அதிகபட்சம் 60 சதவீதம் பேர் மட்டுமே மாநகர பகுதியை சேர்நதவர்களாக இருந்தனர்.

தற்போது 90 சதவீதம் பேர் மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதிகாரிகள், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *