திருச்சி மாவட்டத்தில் 1,48,145 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்…

திருச்சி மாவட்டத்தில் 95 பொதுமக்கள் உள்பட இதுவரை 1,48,145 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் -திருச்சி அரசு மருத்துவமனை தகவல்

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலை வேமாக பரவி வருகிறது. தினமும் 150 முதல் 200 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவில் 199 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது.

கடந்த மார்ச் இறுதி வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 65,672 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 95 பொதுமக்கள் உள்பட இதுவரை 1,48,145 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *