திருச்சி எடமலைபட்டி புதூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.

திருச்சி எடமலைபட்டி புதூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.

மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. இவரது மகன் பிரேம்குமார் (26). பிபிஏ படித்துள்ள இவர் வேலைதேடி, சென்னைக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக குருவாயூர் விரைவு ரயிலில் சென்னைக்கு சென்றார். . திருச்சி எடமலைபட்டி புதூர் அருகே ரயில் வந்தபோது, படிக்கட்டில் நின்றிருந்த பிரேம்குமார் எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார். அப்போது, ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து, ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அத்துடன், பிரேம்குமாரின் செல்போன் மூலம் அவரது அவரது உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *