தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்சி E.B.ரோடு, தையல்கார தெரு, தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் மாற்றம் அமைப்பின் சார்பில் கொய்யா, மாதுளை, சீத்தாப்பழம் உள்ளிட்ட பழவகைகளான மரகன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி, மேலும் தற்போது கொரோணா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பொதுவெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வலியூறித்தியும் சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தாமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

நிகழ்வில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் Art Of Living ஆசிரியர் திரு.A.செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில் நண்பர்கள் சிலம்பக்கூடத்தின் ஆசான் G.N சண்மூகசுந்தரம் செயலர் B.C.யுவராஜ் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம், தாய்நேசம் அறக்கட்டளை ஹெப்சி சத்தியராக்கினி மாற்றம் அமைப்பை சேர்ந்த மணிவேல், அல்லிகொடி, சுதாகர், மைக்கேல், பிரபு, சுந்தர், பாண்டியன் ரெங்கராஜ், தினகரன், S.புவனேஸ்வரன் ஜோஸ்வா காயத்ரி, கார்த்தி, செல்வகுமார், ஜெயந்தி, ஜீவிகா நிஷாந்த், வித்யாசாகர், சந்தோஷ், தர்ஷிதா, கீர்த்திவர்மன்,யுவராஜ், கீர்த்திஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *