சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்த அனுமதி ?

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் வழக்கம். இத்தேர்திருவிழாவில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறும் என்று பெரிதும் எதிர்பாக்கப்பட்ட நிலையில்
காரோண 2 வது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபட்டு தளங்களிலும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அரசு கட்டுப்பாடுகளுடன் தேர் திருவிழா நடத்த அனுமதி அளித்துள்ளது. இதைதொடர்ந்து நாளை கொடியேற்றத்துடன் சித்திரை தேரோட்டம் திருவிழா தொடங்குகிறது.

இதையொட்டி காலை 6 மணி முதல் 8 மணி வரை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. அதேபோல் வருகின்ற 20ம் தேதி நடைபெறும் தேரோட்ட விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *