இங்கிலாந்து இளவரசர் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.  கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த இளவரசர் பிலிப் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப் உயிர் பிரிந்ததாக  அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் பிலிப் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *