திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு..
திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று 05/04/2021 அன்று பிரச்சாரத்திற்காக சிறுவர்களை வேடமிட்டு நடிக்க வைத்ததற்காகவும் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காகவும், சிறுவர்கள் வன்கொடுமை தொடர்பாகவும் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதுதொடர்பாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் நேரடியாக இவ்வழக்கில் ஆஜராகி சம்பந்தப்பட்ட வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.