தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்பு…
தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சுங்க கட்டணம் அதிகரிப்பால் லாரி வாடகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சரக்கு லாரி மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.