கூகுள் மீட் ஜூன் 2021 வரை தான்

கூகுள் மீட் 100 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், கல்வியாளர்கள் (Google Classroom) கூகுள் வகுப்பறையை பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

 

கடந்த ஆண்டு மார்ச் 2020 தொடக்கத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளிகளும், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களும், வணிகங்களும், தங்களின் பாதுகாப்பான வீடியோ கால்களை மேற்கொள்ள கூகுள் மீட் செயலியை பயன்படுத்தத் தொடங்கினர். கூகுள் நிறுவனம் அதன் பீரிமியம் வீடியோ காலிங் செயலியான கூகுள் மீட் ஆப்பை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

 

கூகுள் மீட் இலவசம் வரம்பற்ற வீடியோ அழைப்பை ஜூன் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து ஜிமெயில் கணக்குகளுக்கும் இலவச வரம்பற்ற வீடியோ அழைப்பை ஜூன் 2021 வரை நீடிப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த நீட்டிப்பு செப்டம்பர் 2020 வரை மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 31 2021 நிறைவு பெற்ற நிலையில் இந்த கூகுள் மீட் இலவச வரம்பற்ற வீடியோ கால் அழைப்பு ஜூன் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *