போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்.

சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகளை எச்சரித்த போலீஸ் – போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

திருச்சி மாநகரம் சஞ்சீவி நகர் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் திருநங்கைகள் 3 பேர் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து புறப்பட கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து பார்த்த பொழுது அவர்கள் 3 பேரும் அங்கேயே நின்று இருந்ததாகவும். போலீசார் ஒருவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சுமார் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அப்பகுதியில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக வந்த பேருந்து முகப்பு கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *