சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய குடிமகன்கள்

திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே மது அருந்திய 3 பேர் போதையின் உச்சத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் ஆண்கள் மீது தாக்குதல் நடத்திய அநாகரிகமாக பேசியுள்ளனர்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் காவல்துறையினர் வரும் முன் அந்த 5 பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். இதை தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பிடிபட்ட இருவரையும் கொண்டு வந்து காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் சேரன் நடத்திய விசாரணையில் நெய்தலூர் காலனியைச் சேர்ந்த கார்த்தி, ஜெயராம், வடிவேல் ஆகிய 3 பேரும் கட்டிட வேலை செய்பவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *