பாகிஸ்தானின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி…

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒரு பெண் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆயிஷா மாலிக்கை (55) நிதிபதிகள் தோ்வுக் குழு நியமித்துள்ளது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையில் செயல்பட்டு வரும் சட்ட கமிஷன் ஆயிஷாவின் பதவி உயர்வு குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இதில் ஐந்து பேர் ஆதரவாகவும், நான்கு பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் அவரின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது சட்ட கமிஷன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் பதவி உயர்வு உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2031 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக செயல்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *